மாவட்டத்திற்கு 200 ஆசிரியர்கள் வீதம் 3000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு Digital content creation மற்றும் Digital Assessment creation ICT பயிற்சி

3000அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு Digital content creation மற்றும் Digital Assessment creation தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து சுமார் 200 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் இருந்து ஓர் மாவட்டத்திற்கு 100 ஆசிரியர்கள் வீதம் குறைந்தபட்ச கணினி அறிவு மதிப்பிடப்பட்டு  தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 இவர்களில் இருந்து ஓர் மாவட்டத்திற்கு 50 ஆசிரியர்கள் என்ற வீதம் Digital content creation க்கும், 50 ஆசிரியர்களுக்கு Digital Assessment சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படும்.

இதில் இருந்து சிறப்பான முறையில் Digital content மற்றும் Digital Assessment பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களுக்கு மேலும் மெருகேற்றும்  பயிற்சிகள் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. இவர்கள் இனி வரும் நாட்களில் தங்கள் மாவட்டங்களில் MRP களாக Digital content , மற்றும் Digital assessment creation காக  பயிற்சி வழங்கும் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

இவ்வகையான selection ஆனது ஒளிவு  மறைவு இன்றி மாவட்டங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதுவரை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 400 ஆசிரியர்கள் இவ்வகை பயிற்சிகளை முடித்து தயார் நிலையில் உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் இவ்வகை தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி வழங்குதல் முதல் கட்டமாக இந்த கல்வியாண்டுக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தங்கள் மாவட்டங்கிளில் இவ்வகை தேர்ந்தெடுப்பு முறை குறித்த தகவல்களை உங்கள் BRC மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

இப்படி உருவாகும் 3000 ஆசிரியர்களை கொண்டே தமிழகம் முழுதிலும் உள்ள ஆசிரியர்களுக்கு TNTP குறித்தும் அதில் பங்களிப்பது  குறித்தும் இனி பயிற்சிகள் அமையும்.

எனவே ICT பயிற்சி என்பது குறிப்பிட்ட சில ஆசிரியர்களுக்கே அளிக்கப்படுகிறது என்ற மாயையை  உடைத்தெரியவும். இது அனைவருக்கும் சென்று சேரவேண்டிய , அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஓன்று என்பதை உணர்ந்து பயிற்சி பெற்று சிறப்பாக நம் பங்களிப்பை நல்க முயல்வோம்

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post