B.Ed பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு / B.Ed graduate computer editors waiting forty thousand unemployed





பிஎட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் .

 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஎட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். 

ஆசிரியர் படிப்பு

தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஎட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .

இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை.

இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஎட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில்  ஆனால் பிஎட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை .

இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .

அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்படுகின்றது  ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஎட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் .

தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது .

இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post