புதுச்சேரியில் செயல்படும் ‘ஜிப்மர்’ எனும் ஜவஹார்லால் இன்ஸ்டிடிட்யூட் ஆப் போஸ்ட் கிராஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச் கல்வி நிறுவனத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ‘ஜிப்மர்’ நுழைவுத்தேர்வு மூலம் நடதப்படுகிறது.


தகுதிகள்: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக பயின்று, 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. 


தேர்வு முறை: இரண்டரை மணி நேரம் நடக்கும் சி.பி.டி., எனும் கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 60 கேள்விகள் வீதம் 180 கேள்விகள், பொது அறிவு மற்றும் பகுப்பாய்வு திறன் பகுதிகளில் 20 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 


அனைத்து கேள்விகளும், ‘அப்ஜெக்டீவ்’ முறையில் ’மல்டிபில் சாயிஸ்’ அடிப்படையில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இடம்பெறும். இத்தேர்வின் மூலம் மொத்தம் 200 மருத்துவ மாணவர் இடங்கள் நிரப்பப்படுகிறது.


விண்ணப்பம் துவங்கும் நாள்: மார்ச் 7


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 13


ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 3
விபரங்களுக்கு: www.jipmer.edu.in

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post