ஆர்கிடெக்சர் நுழைவுத் தேர்வு

‘நாட்டா’ எனும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பி.ஆர்க்., எனும் ஐந்தாண்டுகள் கொண்ட கட்டடக்கலை பட்டப்படிப்பை படிக்க இத்தேர்வை எழுதவேண்டியது அவசியம். 

தகுதிகள்: 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பிற்கு பிறகான டிப்ளமா அல்லது இவற்றிற்கு இணையான படிப்பை படித்திருக்க வேண்டும். தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

தேர்வு முறை: இத்தேர்வின் முதல் பகுதியில், கணிதம் மற்றும் ஜெனரல் ஆப்டிடியூட் திறன் பரிசோதிக்கப்படும். இரண்டாவது பிரிவில், மாணவர்களின் வரைதல் திறன் பரிசோதிக்கப்படும். மொத்த மதிப்பெண்கள் 200.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 3

தேர்வு நாள்: ஏப்ரல் 29

விபரங்களுக்கு: www.nata.in

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post