ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி

  • டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல்24 -ல்  ஏவப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும்.
  • மே 20 - ல் ஹப்பிள் முதன்முதலில் கண்ணைத் திறந்து NGC 3532 எனும் விண்மீன் திரளைப் படம் பிடித்தது.
  • அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது.
  • ஏவப்பட்டதின் 30 ஆணடு அனுசரிப்பை ஏப்ரல் 24 , 2020 ல் கொண்டாடப்பட்டது.
  • இது நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி ஆகும்.
  • ஒரு பேருந்து அளவிலான ஹப்பிள் தொலைநோக்கி, பூமியில் இருந்து சுமார் 552 கிமீ உயரத்தில் நொடிக்கு 8 கிமீ வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இது 97 நிமிடத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றி வருகிறது.
  • அகச்சிவப்பு கதிர், புறஊதா கதிர், காணுறு ஒளி ஆகிய மூன்று அலைநீளங்களில் நிறமாலைமானி மற்றும் காட்சி செய்யும் திறன் கொண்டது. 
  • 0.05 வினாடி டிகிரி விலகியுள்ள பொருட்களைக்கூட பிரித்து இனம் காணும் காட்சி திறன் கொண்டது ஹப்பிள்.
  • விண்வெளியில், விண்வெளிவீரர்களால் பழுது பார்க்கப்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரே தொலைநோக்கி ஹபிள் ஆகும். 
  • 1993 முதல் இதுவரை ஐந்து முறை தொலைநோக்கி மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • 7,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள நெபுலாவை படம்பிடித்த நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி
  • கண்ணுறு ஒளியை இனம் காணும் கேமரா தவிர அகச் சிவப்பு (infrared) கேமரா, 2009-ல் ஹப்பிலில் புதிதாகப் பொருத்தப்பட்டது. தற்போது இந்த ‘நெற்றிக்கண்' வழியாகத்தான் பல சிறப்பு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
  • 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புறப்பட்ட ஒளியை ஆராய்ந்து நமக்கு இதுவரை புலப்படும் பிரபஞ்சத்தின் விளிம்பில் உள்ள கேலக்ஸிகள் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளது ஹப்பிள் தொலைநோக்கி.


Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post