tnpsc group4 group 2 exam - current affairs December 2022


 

Current Affairs Monthly (December 2022)

டிசம்பர் 7

உலக பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சாய்கோம் மீராபாய் சானு 

கொலம்பியாவில் நடைபெறும் உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.

உச்சநீதிமன்ற செயலி 2.0 தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் துவக்கி வைத்தார்.

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் உச்சநீதிமன்ற வழக்குவிசாரணை நடவடிக்கை குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் உச்சநீதிமன்ற செயலி 2.0 தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் துவக்கி வைத்தார்

டிசம்பர்6

உலகின் நீளமான ஈரடுக்கு பாலம் கின்னஸ் சாதனை -

மகாராஷ்டிரத்தில் உள்ள நாகபுரி மெட்ரோவின் 3.14கி.மீ தொலைவிலான ஈரடுக்கு பாலம் உலகின் நீளமான ஈரடுக்கு பாலம் என்ற வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது

டிசம்பர்5

கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கும் கருவி: சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்


உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி - 2௦ தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.


உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தாராக (நீதிபதிகள் முன் செங்கோல் ஏந்திச் செல்லும் உதவியாளர் -லலிதா நியமிக்கப்பட்டுள்ளார்


டில்லியில் நடைபெற்ற என்சிசி பயிற்சியில் உதகை அரசு கலைக் கல்லூரி மாணவி தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு இந்திய ராணுவத்தின் பயிற்சி விமானத்தில் பயணித்து, 2 கிலோமீட்டர் உயரத்திலிருந்து பாராசூட்டிலிருந்து குதித்து சாகச பட்டியலில் இடம் பிடித்தார் - சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோகிலவாணி

 

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post