அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் / Classes will be conducted by robots for government school students

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்ட்னங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழக ஆரம்பள்ளி 
ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் தாஸ் நெல்லையில் அளித்த பேட்டி அளித்தபோது ஒரு பக்கம் 13,000 புதிய ஆசிரியர்களை நியமிக்கிறோம் என சொல்லிவிட்டு 500 ரோபோக்களை கொண்டு பாடம் நடத்துவோம் என அமைச்சர் சொல்வது விந்தை.

மேலும், ரோபோக்களை வைத்து பாடம் நடத்தப்படும் என்ற அமைச்சர் அறிவிப்பு அதிர்ச்சிக்குரியது, என்றும் "அ"என்று கை பிடித்து கற்று கொடுக்கும் தொடு உணர்வு ஆசிரியர் மூலமே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post