நீட் மாணவர்களுக்கு மார்ச்சுக்குள் லேப் டாப் வழங்கப்படும்
நீட் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, மார்ச் இறுதிக்குள், லேப் - டாப் வழங்கப்படும், என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
சென்னை, அடையாறு புற்று நோய் மையமும், அண்ணா பல்கலையும் இணைந்து, சென்னையில், இரண்டு நாள் இளைஞர் விழாவை, நேற்று துவக்கின.
இந்த விழாவை துவக்கி வைத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள, 419 மையங்களில், &'நீட்&' தேர்வுக்கான பயிற்சி பெற, 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; 70 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, மார்ச் இறுதிக்குள், அரசின் இலவச, &'லேப் - டாப்&' வழங்கப்படும்.
மேலும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ் 1 வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், பிளஸ் 2 படித்துக் கொண்டே,தோல்வியடைந்த பாடங்களுக்கு தேர்வு எழுதலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
0 تعليقات
Thanks for your comment