முறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள் | Two types of questions to prevent irregularities



10-ம் வகுப்பு முதல், plus 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஒரே வகையான வினாத்தாள் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 16ல், பொது தேர்வுகள் துவங்குகின்றன. இந்த தேர்வுகளில், 27 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வு பணியில், ஒரு லட்சம் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த தேர்வுக்கு, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வில், இரண்டு வகை வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றில் உள்ள கேள்விகள் எதுவும் மாற்றப்படாது. ஆனால், கேள்விகளின் வரிசைகள் மாற்றப்பட்டுஇருக்கும். மாணவர்கள், ஒருவரையொருவர், 'காப்பி' அடிப் பதை தடுக்க, இரண்டு வகை வினாத்தாள்கள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேர்வு அறைகளில், மாணவர்களை அருகருகே அமர வைக்க கூடாது. ஒவ்வொரு பெஞ்சிலும், இரு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். ஒரு பெஞ்சில் அமரும் இரு மாணவர்களுக்கு, ஒரே வகை வினாத்தாள் வழங்கக் கூடாது. முன் பெஞ்சில் உள்ள மாணவருக்கு, ஒரு வகை வினாத்தாளும், அவருக்கு பின் அமரும் மாணவருக்கு, மற்றொரு வகை வினாத்தாளும் வழங்க வேண்டும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Thanks for your comment

أحدث أقدم