NEET தேர்வில் வதந்திகளை நம்ப வேண்டாம் CBSE

NEET தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, CBSE, அறிவுறுத்தியுள்ளது.
+2 முடிக்கும் மாணவர்கள், MBBS., - BDS., படிப்புகளில் சேர, NEET நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, NEET தேர்வு, May, 6ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, Feb., 9ல், Online விண்ணப்ப பதிவு துவங்கியது. March, 9 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இந்நிலையில், CBSE., சார்பில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், NEET தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும். ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
’அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, தேவையற்ற வதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்’ என, CBSE, கூறியுள்ளது.

Post a Comment

Thanks for your comment

أحدث أقدم