NEET தேர்வு ஓர் அறிமுகம் | INFORMATION ABOUT NEET EXAM

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS., BDS., MD., மற்றும் MS., போன்ற மருத்துவப் படிப்பில் உள்ள மாணவர் இடங்கள், ‘NEET’ எனப்படும் ‘நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’ அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதில், இளநிலை படிப்புகளுக்கான தேர்வு ‘NEET -UG.,’ மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான தேர்வு ‘NEET-PG.,’ எனவும் அழைக்கப்படுகிறது. ‘NEET -UG.,’ தேர்விற்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ., சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
விலக்கு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ‘எய்ம்ஸ்’ கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ‘ஜிப்மர்’ ஆகியவற்றிற்கு மட்டும் ‘NEET’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 17 -25 வயதுடைய மாணவர்கள், ‘NEET-UG.,’ தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எஸ்.சி.,/எஸ்.டி.,/இதர பிற்பட்ட பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் விலக்கு உண்டு.
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட அறிவியல் பாடங்களை முதன்மை பாடமாக எடுத்து, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடத்திலும் 50 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., /எஸ்.டி.,/ இதர பிற்பட்ட வகுப்பினர் 40 % மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 % மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதுமானது.
ஆதார் அவசியம்: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ‘ஆதார் எண்’ அவசியம். பள்ளி பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை, இரண்டிலும், மாணவரது பெயர் ஒருபோல இடம்பெற்றிருப்பதும் அவசியம்.
தேர்வு முறை: 3 மணி நேரம் நடக்கும் இத்தேர்வு ‘அப்ஜெக்டீவ்’ முறையில், அடிப்படை அறிவியல் அறிவை பரிசோதிக்கும் வகையில் கேட்கப்படும். அதில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள்  என மொத்தம் 180 கேள்விகள் வினாத்தாளில் இடம் பெறும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.  ஒவ்வொரு தவறான விடைக்கும் தலா ஒரு மதிப்பெண் வீதம் பிடித்தம் செய்யப்படும்.
வினாத்தாள்: பொதுவாக, வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இடம்பெறும். இவைதவிர, நாடு முழுவதும், 10 மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தமிழ் மொழியிலும் கேள்விகள் இடம்பெறும்.
More Details: http://cbseneet.nic.in

1 تعليقات

Thanks for your comment

إرسال تعليق

Thanks for your comment

أحدث أقدم