தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு / Recipe selection for individuals
சென்னை: 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20ல், செய்முறை தேர்வு துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, அறிவியல் பாட செய்முறை தேர்வு, வரும், 20 முதல், 28ம் தேதி வரை நடக்கும்.தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அதே பள்ளியில், செய்முறை தேர்விலும் பங்கேற்க வேண்டும். இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி, விபரம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று பிற்பகலில், ஹால் டிக்கெட் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை வரை, ஹால் டிக்கெட் வெளியாகாததால், தேர்வர்கள் நீண்ட நேரம் அவதிப்பட்டனர்.
0 تعليقات
Thanks for your comment