B.Arch., படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
பி.ஆர்க்., படிப்புக்கான விண்ணப்ப பதிவு அவகாசம், வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர, 'நாட்டா' என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான தேர்வு, ஏப்., 29ல் நடக்கிறது. இத்தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, ஜனவரி, 18ல் துவங்கி, மார்ச், 2ல் முடிந்தது. இதுவரை, 40 ஆயிரத்துக்கும் குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளன.
அதனால், விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க, இந்திய ஆர்கிடெக்சர் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாட்டா நுழைவு தேர்வு எழுத விரும்புவோர், வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, http://www.nata.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 تعليقات
Thanks for your comment