பைலட் படிப்புக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு
விமான, pilot படிப்பில் சேர, May, 12ல் நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.+ 2 முடிக்கும் மாணவர்கள், விமானங்களில் பைலட்டாக பணியாற்ற, பல்வேறு நிறுவனங்கள், பயிற்சி படிப்புகளை நடத்துகின்றன.
மத்திய அரசின் விமான போக்கு வரத்து துறை கட்டுப்பாட்டில் உள்ள, &'இந்திராகாந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமி&' சார்பிலும், வணிக ரீதியான பைலட் உரிமம் மற்றும், பி.எஸ்சி., பைலட் படிப்புகள் நடத்தப்படுகின்றன.வரும் கல்வி ஆண்டில், இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, மே, 12ல் நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. ஏப்., 24 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை, http://igrua.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
Thanks for your comment