பொறியாளர் பணி விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல் பிரிவில் 300; சிவில் பிரிவில், 25 என, 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களை, எழுத்துத் தேர்வு வாயிலாக நிரப்ப உள்ளது.
இதற்கான அறிவிப்பு பிப்., 14ல் வெளியானது. மின் வாரியத்தின் இணைய தளம் வாயிலாக, பிப்., 28க்குள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மின் வாரிய இணையதளம் வேகமாக இயங்காததால் பட்டதாரி கள் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து, விண்ணப்பிக்கும் காலக்கெடு, இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், இன்றுடன் முடிகிறது.
0 تعليقات
Thanks for your comment