தேசிய கீதத்தை அவமதித்த மாணவன் சஸ்பெண்ட்
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கொச்சியில், மூவாட்டுபுழா பகுதியில் உள்ள, நிர்மலா கலைக் கல்லுாரியில், தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக, அஸ்லாம் என்ற மாணவனை, கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இது குறித்து, கல்லுாரி துணை முதல்வர் கூறுகையில், &'சமீபத்தில், தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட போது, மாணவன்,அஸ்லாம், அதை அவமதித்ததுடன், மற்ற மாணவர்களுக்கும் இடையூறாக புகைப்படம் எடுத்த காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன்படி, அந்த மாணவனை சஸ்பெண்ட் செய்துள்ளோம்&' என்றார்.

0 تعليقات
Thanks for your comment