உலகின் முதல் அணுசக்தி விமானம் | The world's first nuclear aircraft




உலகின் முதல் அணுசக்தி விமானம் அணுசக்தியில் இயங்கும் உலகின் முதல் விமானத்தை, விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் தற்போது விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. விமானத்தின் வடிவமைப்பும், தொழில்நுட்பங்களிலும் புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்துப்படுகின்றன. பொதுவாக விமானங்களின் எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் முழுவதும் அணுசக்தியில் இயங்கும் விமானத்தை தயாரித்து வருகின்றனர். 

இந்த விமானம் மூலம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு, வெறும் மூன்று மணி நேரத்தில் சென்று விடலாம். மணிக்கு 1,850 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. தற்போது லண்டனில் இருந்து, நியூயார்க் செல்ல 8 மணி நேரம் ஆகிறது. 

பெரிய பறவை

இந்த விமானத்துக்கு 'மக்னாவம்' என தயாரிப்பு குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த லத்தீன் சொல்லுக்கான தமிழ் அர்த்தம் 'பெரிய பறவை'. இதன் வடிவமைப்பும் ஒரு பறவையைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல்

பெட்ரோலுக்குப் பதிலாக, அணுசக்தியில் இயங்குவதால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்ததாக உள்ளது. ஏனெனில் மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெளியிடும் கார்பன் அளவு மிக மிக குறைவு. 'ஜீரோ கார்பன்' என்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் எடை, மற்ற விமானங்களை விட மிக குறைவு. அதே நேரத்தில் இதில் 500 பயணிகள் வரை பயணிக்கலாம். அணுசக்தி தொழில்நுட்பம் மூலம், விமானத்துக்கு தேவையான மின்சாரத்தை, மிக வேகமாக ரீசார்ஜ் செய்ய முடியும். 50 ஆண்டுகளுக்கு முன் அணு மின்சாரம் அறிமுகமானது. பல்வேறு வழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது விமான பயன்பாட்டுக்கும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் விஞ்ஞானிகள். 

திருப்பம்

இந்த விமான வடிவமைப்பு குழுவில் கடந்த ஓராண்டாக ஈடுபட்டு வரும் ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த, விஞ்ஞானி ஆஸ்கார் வினல்ஸ் கூறும்போது, 'இந்தவகை விமானம், விமானத்துறையில் திருப்பத்தை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது. தற்போது துவக்க நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இந்த தொழில்நுட்பம், முழுமையடையும்' என்றார்.

Post a Comment

Thanks for your comment

أحدث أقدم