நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும், 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பிள ஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும், இந்திய மருத்துவம் படிக்க, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, பிப்., 9ல் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், நேற்று நள்ளிரவு, 11:30 மணியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள், &'ஆதார்&' எண் இல்லாதவர்கள், அறிவிக்கப்பட்ட வயது வரம்பை விட, அதிக வயதுள்ளோர் விண்ணப்பிக்க, புதிதாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், மார்ச், 12 வரையிலும், தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி, மார்ச், 13 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.
0 تعليقات
Thanks for your comment