ஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு
சென்னை, அம்பத்துார் அருகே, சோழபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், புதிய கட்டடத்தை திறந்து வைத்தபின், அவர் கூறியதாவது: 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாணவ - மாணவியருக்கு, சிறந்த ஆசிரியர்களால், சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் நீட் தேர்வில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெற்றி பெறுவர். பள்ளிக் கல்வித் துறையை பொருத்த வரை, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆறாம் வகுப்பில் இருந்து, 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புக்களை ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
0 تعليقات
Thanks for your comment