வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறம் மாற்றம்

வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறம் மாற்றம்


வரும் கல்வி ஆண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, புதிதாக, இரண்டு வகை சீருடைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கான சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் அனுப்பியுள்ளார்.


* ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள், சாம்பல் நிறத்தில் பேன்ட்டும், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட சட்டையும் அணிய வேண்டும். மாணவியர் மட்டும், கூடுதலாக, சாம்பல் நிற, 'ஓவர் கோட்' அணிய வேண்டும்.* பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கருநீல நிறத்தில் பேன்ட் மற்றும் கருநீல நிறத்தில் கோடிட்ட சட்டை அணிய வேண்டும்; மாணவியர், கூடுதலாக கருநீல நிறத்தில், 'ஓவர் கோட்' அணிய வேண்டும்.இதற்கான புகைப்படத்தையும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ளார். வரும் கல்வி ஆண்டிற்கு பயன்படுத்தும் வகையில், இந்த சீருடைகளை, மாணவர்கள் தைத்து கொள்ள வேண்டும் என்று, அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அரசின் சார்பில் வழங்கப்படும், இலவச சீருடை நிறத்தில், எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post Navi

إرسال تعليق

0 تعليقات