பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள பிளாக், செயலி குறித்த தகவல்கள், புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
சமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கின்றன.
வண்ண படங்கள்:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையானதாக, புதிய பாடத்திட்ட கருத்துக்கள் இடம்பெறும் என, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட, டிஜிட்டல் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்வர். புத்தகத்தை தாண்டி, மாணவர்கள் சிந்திக்கவும், தகவல்களை பெறவும், இம்முறை உதவும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
பாடத்திட்டக் குழு ஆசிரியர்கள் கூறியதாவது: ஒருங்கிணைந்த கணினி வழி கல்விக்கென, ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நிறைய செயல்திட்டங்கள் வடிவமைத்து, கல்வித்துறை இணையதளம், செயலி உருவாக்கி, பதிவேற்றம் செய்து வருகிறோம். இதை, ஆசிரியர்கள் மட்டுமே, பார்வையிட்டு வந்தனர்.
தேடல்:
தற்போது, மாணவர்களும் தெரிவிக்கும் வகையில், புதிய பாடப்புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் இடையே, 'பாக்ஸ்' ஆக, இத்தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை, கல்வியில் புகுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம், பள்ளி மாணவர்களின் தேடலை விரிவாக்கும். இதுதொடர்பாக, ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
Thanks for your comment