B.E., - B.Tech., மற்றும் B.Arch., பட்டப்படிப்பு முடித்தவர்கள், ME மற்றும், MBA., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், டான்செட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, TANCET Entrance Exam, May, 20ல் நடத்தப்படும் என, அறிவிக்கப் பட்டிருந்தது.அதே நாளில், அரசுத்துறையில், உதவி இன்ஜினியர் பணியில் காலியிடங்களுக்கு, TNPSC., போட்டி தேர்வு நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, இன்ஜினியரிங் பட்டதாரிகள், போட்டி தேர்வை எழுதுவதா, மேல் படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுவதா என, குழப்பம் அடைந்தனர்.இது குறித்து, நமது நாளிதழில், ஒரு வாரத்திற்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, டான்செட் தேர்வு தேதியை மாற்றும்படி, தமிழக உயர்கல்வித்துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., கடிதம் அனுப்பியது.இதை தொடர்ந்து, TANCET தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை TANCET தேர்வு கமிட்டி செயலர், நாகராஜன் நேற்று அறிவித்தார்.புதிய அறிவிப்பின்படி, அண்ணா பல்கலையின் டான்செட் தேர்வு, ME., - M.Tech., - எம்.ஆர்க்., - எம்.பிளான் மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு, மே, 19ல் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.சி.ஏ., படிப்புக்கு, மே, 20ல் தேர்வு நடத்தப்படுகிறது.
0 تعليقات
Thanks for your comment