B.E கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு


தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொதுப் பாடப்பிரிவில் சேர்க்கை பெறுவதற்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டி.என்.இ.ஏ., வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி கட்-ஆப் மதிப்பெண் 190க்கு மேல் பெற்றுள்ள மாணவர்கள் இந்த முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தங்களது செயல்பாடுகளைக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நிறைவு செய்ய வேண்டும்.
முதலாவதாகக் கல்லூரி முன்வைப்புத் தொகை கட்டணத்தை ஜூலை 21 முதல் ஜூலை 24 வரை செலுத்தலாம். இந்த தொகையை ஆன்லொஐனில் டி.என்.இ.ஏ., இணையதளம் வழியாகச் செலுத்த வேண்டும், அல்லது வரவோலையாகவும் (டி.டி) செலுத்தலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.5000மும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு ரூ.1000மும் முன்வைப்புத் தொகையாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 
குறித்த காலத்திற்குள் கட்டண தொகையை செலுத்தத் தவறிய விண்ணப்பதாரர்கள் அடுத்த சுற்றில் கட்டணம் செலுத்தி கலந்தாய்வில் பங்கேற்கலாம் ஆனால் அச்சுற்றின் காலி இடங்களையே அவர்களால் தேர்வு செய்ய இயலும்.
ஜுலை 25 முதல் ஜூலை 27 மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்ப வரிசை பட்டியல் உள்ளிடு செய்ய வேண்டும், பின்னர் மறுநாள் ஜூலை 28 மாலை 5 மணிக்குள் தயார் செய்த விருப்ப வரிசைப் பட்டியலை உறுதி செய்ய வெண்டும், தவறினால் 5 மணிக்கு மேல் உள்ளிடு செய்த விருப்பப் பட்டியலை தானாகவே கணினி உறுதி செய்யப்பட்ட பட்டியலாக எடுத்துக்கொள்ளும்.
எத்தனைக் கல்லூரி - பாடப்பிரிவு வேண்டுமானாலும் விருப்ப வரிசை பட்டியலில் உள்ளிடலாம், எனவே விண்ணப்பதாரர்கள் தங்கலின் விருப்பத்தை வரிசைப்படுத்தி அதிக விருப்பங்களை உள்ளிடுவது நல்லது. அதே போல் ஒரு முறை உறுதி செய்து லாக் செய்த விருப்பப் பட்டியலில் எந்த மாற்றத்தையும் பின்னர் செய்ய இயலாது.
தரவரிசை மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் தற்காலிக ஒதுக்கீடு டி.என்.இ.ஏ., இணையதளத்தில் ஜூலை 28 அன்று வெளியிடப்படும், விண்ணப்பதாரர்கள் ஜூலை 29 மாலை 5 மணிக்குள் தங்களது ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கான ஒதுக்கீட்டை உறுதி செய்யவோ அல்லது எந்த ஒரு ஆப்ஷனையும் சமர்ப்பிக்கத் தவறினால், ஒதுக்கப்பட்ட இடம் தரவரிசைப்படி அடுத்த விண்ணப்பதாரர்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படும்.
இவற்றின் அடிப்படையில் இறுதி ஒதுக்கீடு ஜூலை 30ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பதாரர் தனது ஒதுக்கீட்டு ஆணையை டி.என்.இ.ஏ., இணையதளத்தில் ‘லாக் இன்’ செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 3ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ ஒதுக்கீடு பெற்ற கல்லூரிக்குச் சென்று சேர்க்கை வழிமுறைகளை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்களது மருத்துவ ஒதுக்கீட்டு ஆணையை டி.எப்.சி.,யில் சமர்ப்பித்த பின்பே தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய இயலும்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post