தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித்துறையில் விரைவில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளோம். இயங்காமல் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 تعليقات
Thanks for your comment