சொத்துவரி உயர்வு அரசாணை வெளியீடு


சொத்து வரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 




1998ம் ஆண்டிற்கு பிறகு, சொத்து வரி உயர்த்தப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதனைய ஏற்று சொத்து வரியை உயர்த்த ஐகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் சொத்துவரி 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்புக்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக்கள் மற்றும் குடியிருப்புக்கள் அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி விதிக்கப்பட உள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments