தமிழகத்தில், வழக்கமாக, மருத்துவசேர்க்கை முடிந்த பின், பி.எஸ்சி.,நர்சிங் படிப்புக்கான விண்ணப்பவினியோகம் நடக்கும். அதன் பின்,டிப்ளமோ நர்சிங் படிப்புக்கானவிண்ணப்பங்கள் வினியோகம்இருக்கும். இதனால், மருத்துவ இடம்கிடைக்காத மாணவர்கள், பி.எஸ்சி.,நர்சிங் படிப்பில் சேருவர். அதிலும்இடம் கிடைக்காதவர்கள், டிப்ளமோநர்சிங் படிப்பில் சேர்வர். ஆனால், இம்முறை மருத்துவ படிப்புக்கானகவுன்சிலிங் முற்றிலும் நிறைவடையாத நிலையில், கடந்த, 22ம் தேதி முதல்,டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுவருகின்றன.
கல்வியாளர்கள் கூறுகையில், மருத்துவ படிப்பு மற்றும் பி.எஸ்சி., நர்சிங்படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் சேருவர். &'இதைக்கருத்தில் கொண்டே, மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின் பி.எஸ்சி.,நர்சிங் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், இம்முறை டிப்ளமோநர்சிங் விண்ணப்பங்கள் முதலில் கொடுக்கப்படுவதால் மாணவர்கள்குழப்பம் அடைந்துள்ளனர்&' என்றனர்.மருத்துவக் கல்வி இயக்குனர்எட்வின்ஜோ கூறுகையில், தற்போது டிப்ளமோ நர்சிங் படிப்புக்கானவிண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகின்றன.
இது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அதை மாற்ற முடியும். &'&'மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின், பி.எஸ்சி., நர்சிங் சேர்க்கை நடத்துவதாஅல்லது டிப்ளமோ நர்சிங் சேர்க்கை நடத்துவதா என, பின்னர் முடிவுசெய்யப்படும். தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, விண்ணப்பங்கள்வழங்கப்பட்டு வருகின்றன,என்றார்.
0 Comments
Thanks for your comment