நாளை நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம்


இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் நாளை தோன்றவுள்ளது.சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விடும். இதன் காரணமாக முழுச் சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திரக் கிரகணம் தோன்றவுள்ளது.

மேலும் கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திர கிரகணம் என்றும் இது ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பிய, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும் என்றும், வட அமெரிக்கா, ஆர்டிக், பசிபிக் பகுதிகளில் முழுமையாகவே தெரியாது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post