ஆசிரியர் தினத்தில் மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது


தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில்முக்கியமாக, பொதுதேர்வுகளுக்கான, ரேங்கிங்' முறைரத்து செய்யப்பட்டது. பத்தாம்வகுப்பு, பிளஸ் 2 முடித்தமாணவர்களில், மாநில மற்றும்மாவட்ட அளவில், முதல் மூன்றுஇடங்களை பிடித்தவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில், ஆங்கில வழிமாணவர்களுக்கே, அதிகஉதவித்தொகை கிடைத்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழிமாணவர்களும் பின்தங்கினர்.

மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீதுகுறைந்தது.இதை மாற்றும் வகையில், தமிழ் வழியில் படித்து, நல்லமதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் புதியதிட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, 2017 -18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையானமாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்புமற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்புமாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசுவழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்தவிருதுகள் வழங்கப்படுகின்றன.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post