மாணவர்களுக்கு நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்க முடிவு
மாணவர்கள், வளர்இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை ஆக. 10 மற்றும் 17 -ஆம் தேதி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வளர்இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் கட்டமாக வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வளர்இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் மேம்பட குடற்புழு நீக்க மாத்திரை வழங்க அரசு முடிவு செய்து கடந்த பல ஆண்டுகளாக, ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. நிகழாண்டு இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த மாத்திரை வழங்கல் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
இதில் ஆக. 10-ஆம் தேதியும், 17 -ஆம் தேதியும் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட பள்ளிக்குச் செல்லும், பள்ளி செல்லாத குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவது எனவும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

0 Comments
Thanks for your comment