நடப்பு நிகழ்வுகள் | Current Affairs Daily 20/8/2018

1. இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று ஆண்களுக்கான 10 மீ., துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது.இந்த போட்டியில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

2. தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு:
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, நாளை(ஆக., 21) சென்னை வருகிறது. அந்த அஸ்தி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உட்பட, ஆறு இடங்களில் கரைக்கப்பட உள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 17ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல், டில்லியில், யமுனை நதிக்கரையில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் அஸ்தியை, நாடு முழுவதும் உள்ள புண்ணிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்க, பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி, வாஜ்பாயின் அஸ்தி கலசம், நாளை சென்னை வருகிறது.

தமிழகத்தில் சென்னையில், அடையாறு கடலில் கலக்கும் இடம்; மதுரையில் வைகை ஆறு; திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு; ஈரோட்டில் பவானி ஆறு; ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடல் என, ஆறு இடங்களில் கரைக்கப்படவுள்ளது.


3. ஆசிய விளையாட்டுப்போட்டியில் 65 கிலோகிராம் எடைப்பிரிவு மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post