அங்கீகாரமற்ற MBA படிப்பு! பெரியார் பல்கலையில் சர்ச்சை


சேலம், இடைப்பாடி, பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரியில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெறாமல், எம்.பி.ஏ., படிப்பு துவங்கப்பட்டுள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில், 2012ல், பெரியார் பல்கலை உறுப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. இங்கு, 550க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.நடப்பு கல்வியாண்டில், எம்.பி.ஏ., படிப்பு துவங்கி, 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்படும் என அறிவித்த நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரமின்றி, எம்.பி.ஏ., துவங்கியது, சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இது குறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:MBA., -MCA., உள்ளிட்டவை,B.E., - M.E., உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு இணையாக கருதப்படுகிறது. அதனால், ஏ.ஐ.சி.டி.இ., எனும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம், அங்கீகாரம் பெறுவது அவசியம். ஆனால், இடைப்பாடி உறுப்பு கல்லுாரியில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்காமல், எம்.பி.ஏ., வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இடைப்பாடி கல்லுாரி முதல்வர் வெங்கடேஸ்வரன் கூறுகையில், &'&'பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரி என்பதால், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற தேவையில்லை, என்றார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post