NEET நுழைவு தேர்விற்கு இலவச பயிற்சி மத்திய அரசு ஏற்பாடு




உயர்கல்வியில் நுழைவு தேர்வு நடத்த தேசிய போட்டித்தேர்வு முகமை என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த முகமைக்கு கீழ், நாடு முழுவதும் 2,967 மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களை, நீட்,ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கற்றல் மையங்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்த மையங்கள் செப்., 8 முதல் செயல்பட துவங்கும். தேர்வு பயிற்சிக்காக மட்டுமின்றி, இந்த மையங்களை கற்பித்தல் மையங்களாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. அதிக கட்டணம் காரணமாக தனியார் பயிற்சி மையங்களில் படிக்க முடியாமல் கவலையில் இருக்கும் திறமைவாய்ந்த மாணவர்களுக்கு இந்த மையங்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் கிராமப்புற பகுதி மாணவர்களுக்கு இந்த மையம் பெரிதும் உதவியாக இருக்கும் என்றார் 


முதல்கட்டமாக ஜனவரி மாதம் நடக்கும் ஜேஇஇ தேர்வுக்காக விரைவில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் தேசிய தேர்வு முகமையின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்ப பதிவு செப்., 1 துவங்கும். தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பின்னர், மாணவர்களுக்கு அவர்கள் செய்த தவறு குறித்து தெளிவான குறிப்புகளுடன் விளக்கமளிக்கப்படும்

.

Post a Comment

Thanks for your comment

أحدث أقدم