மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படும், 1,311 பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை, என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில், செங்கோட்டையன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நடப்பாண்டில், 100 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும்; 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெற்றோர் ஆசிரியர் கழகம், சிறப்பாக செயல்படாத பள்ளிகளில், அக்கழகத்தை கலைத்துவிட்டு, புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள், ஒரே பகுதியில், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என, 1,311 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை மூடும் எண்ணம், அரசிடம் இல்லை. பள்ளிகளுக்கு தேவையான வசதிகள், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு வழி ஏற்படுத்தி வருகிறோம்.

கல்வியாளர்கள், மனித நேயமுள்ளவர்கள், அப்பள்ளிகளுக்கு தேவையான உதவி செய்யலாம். பள்ளிகளை மூடக்கூடாது என, போராட்டம் நடத்துவதாக கூறுவோர், அப்பள்ளிகள் செயல்பட என்ன செய்ய வேண்டும் என, யோசனை கூற வேண்டும். அங்கன்வாடி மையங்கள் விரைவில் தரம் உயர்த்தப்பட்டு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., கற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
Thanks for your comment