உங்கள் குரலால் வீட்டை கட்டுப்படுத்தலாம்!


அமேசான், தன் 'அலெக்சா' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்து, பல கருவிகளை விற்பனை செய்து வருகிறது.
'ஸ்மார்ட் ஸ்பீக்கர்' வகை கருவிகளான, 'எக்கோ, டாட், ஷோ' போன்ற கருவிகளுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள அமேசான், மேலும் சில சிறிய கருவிகளையும் வெளியிட்டுள்ளது.
வீட்டில் இருப்போரின் குரல் உத்தரவுகளை நிறைவேற்றும் அலெக்சா மென்பொருள் தான் இந்த கருவிகளின் அடிப்படை. வீட்டாரின் குரலுக்கு கட்டுப்படும், 'ஸ்மார்ட் பிளக்'குடன் இணைந்துள்ள எந்த கருவியையும் முடுக்கவோ, அணைக்கவோ முடியும். அதே தொழில்நுட்பத்தின் அடிப்படையில், 'எக்கோ ஆட்டோ' என்ற கருவி, காரில் உள்ள பல கருவிகளை குரல் மூலம் கட்டுப்படுத்த உதவுகிறது.
சமயலறையில் இருக்கும் நுண்ணலை அடுப்பையும், குரல் மூலம் கட்டுப்படுத்தும் கருவியையும், அமேசான் அறிமுகப்படுத்தி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவை, வீட்டு உபயோகக் கருவியாக மாற்றுவதில், கூகுளை விட அமேசான் அசத்தி வருகிறது.

Post a Comment

Thanks for your comment

أحدث أقدم