அன்பான ஆசிரியர்களே !. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com

Sep 28, 2018

REMO RK

மாதுளை லாபம் தரும் பண பயிர் சாகுபடி முறைகள்

மாதுளை லாபம் தரும் பண பயிர் சாகுபடி முறைகள்அதிக விலை தந்து, மருத்துவத்துக்கு பயன்படும் பணப்பயிர் 'மாதுளை'. இதை அதிகளவில் வளர்த்து பயன் பெறலாம். குறிப்பாக மாதுளையில் ஜோதி, கணேஷ் கோ - 1, ஏற்காடு - 1, மிருதுளா, பக்வா, ருபி, ருத்ரா அரக்தா என பல வகைகள் உள்ளன. சில வகை, விதை உள்ள மற்றும் விதை இல்லா குணங்கள் கொண்டவை.
வேர் விட்ட குச்சிகள் மூலம் ஏக்கருக்கு 10 டன் பழங்கள் ஆண்டுக்கு மகசூல் பெறலாம்.
12 முதல் 18 மாதம் வளர்ந்த இளம் கன்றுகள் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் விலையில் கிடைக்கிறது.
ஏக்கருக்கு 650 முதல் 700 கன்றுகள் வரை நடலாம். வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் இடைவெளி விடவும். குழிகள் 2 அடி ஆழம், 2 அடி அகலம், 2 அடி நீளம் எடுத்து மண்புழு உரம், உயிர் உரங்கள், சூடோமோனாஸ் இட்டு நட வேண்டும். ஆண்டு முடிவில் யூரியா 440 கிராம், சூப்பர் 635 கிராம், பொட்டாஷ் 650 கிராம், 5 கிலோ மண் புழு உரத்துடன் இட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை காய்த்து ஓய்ந்ததும் மீண்டும் கவாத்து தேவை.
காய்ந்த கிளைகள் அகற்றப்பட வேண்டும். தரையில் இருந்து 2 அடி வரை வளர விட்டு 4 முதல் 5 வரை கிளைகள் படர கவாத்து தேவை. அதிக பூக்கள் இருப்பின் பெரிய கனிகள் பெற வழிகள் உள்ளன.
பறவை வலைகள் மற்றும் விளக்குப்பொறி வைப்பது அவசியம். பூக்கும் தருணம் நன்மை செய்யும் பூச்சியான கிரைசோப்பா 50 இளம்பருவ பூச்சி ஒரு கிளைக்கு என விட்டு (நான்கு முறைகள்) பத்து நாள் இடைவெளியில் பூக்கத் துவங்கியதும் இடுதல் அவசியம். இதனால் அசுவினியை முழுவதும் கட்டுப்படுத்தலாம். பழத்தை குறிப்பாக தாக்கும் ஈக்களை இனக்கவர்ச்சி பொறி மூலம் எளிதில் அழித்திடலாம்.
தண்டுத்துளைப்பான், பழம் துளையிடும் பூச்சிக்கு பழங்களை வேப்பம் எண்ணெய் தோய்த்த துணிப்பைகள் கட்டியும் (அதாவது பழந்துளைப்பான் முட்டையிடாமலேயே விரட்டும் அற்புத உத்தியை) 5 செ.மீ., சுற்றளவு கொண்ட காய்கள் உற்பத்தியானதும் செய்தல் அவசியம்.
பழங்களை பாதுகாக்க டிரைக்கோ கிரம்மா கிலோனில் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் என்ற அளவில் விட வேண்டும். மேலும் தாய் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டதும் ஏக்கருக்கு 3 லிட்டர் வேப்பம் எண்ணெய் பயன்படுத்தலாம்.
மறுபடியும் 15 நாள் இடைவெளியில் இருமுறை இதையே தெளிக்கலாம். ஆக ஆயிரம் கிலோ மாதுளை பழங்களை, ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்றால் ஆண்டு தோறும் அபரிமிதமான பண வரவுக்கு வழி உள்ளது. அதிக பராமரிப்பு இல்லாத பயிர் இது. இருப்பினும் கவனமாக கண்காணித்து வருமானம் ஈட்டலாம். தொடர்புக்கு 98420 07125.
- முனைவர் பி.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர் தேனி.

REMO RK

About REMO RK -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment