பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை
தேர்வு எழுதியவர்களுக்கு, நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வை எழுதிய, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வர் களுக்கு, நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு நேரில் சென்று, சான்றிதழை பெறலாம்.ஏற்கனவே, பள்ளி வழியாக வழங்கப்பட்ட நிரந்தர பதிவெண் உள்ள தேர்வர்கள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு, ஒருங்கிணைக்கப் பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தரப்படும்.முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு, தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களை, தேர்வு மைய தலைமை ஆசிரியர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment