308 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம்!

308 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம்!




தமிழகத்தில் இயங்கும் மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளின் கட்டிடங்களுக்கு முறையான கட்டிட வரைபட அனுமதி பெறாதபள்ளிகள் கட்டிட வரன்முறைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

அதன்படி தற்காலிக அங்கீகாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.இதுவரை 1440 பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 5ம் கட்டமாக இன்று 308 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விழா இன்று வேலூரில் நடக்கிறது.பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அங்கீகார உத்தரவுகளை வழங்குகிறார்.இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 64, வேலூர் 109,கிருஷ்ணகிரி 81, தர்மபுரி 54 என 308 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
Post Navi

Post a Comment

0 Comments