மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளுக்கு ஜூடோ, கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 5,711 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 99 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு 100 மாணவிகள் வீதம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த பயிற்சியானது வாரத்திற்கு இரண்டு நாள் என மூன்று மாதத்திக்கு வழங்கப்படுகிறது. மேலும் வரும் திங்கட்கிழமையில் இருந்தே சில பள்ளிகளில் பயிற்சிகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
9ம் வகுப்பு மாணவிகள், பதின்மபரும மாணவிகள் என்பதால் பள்ளி சார்ந்த இடங்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, தன்னம்பிக்கை அதிகரிப்பது, உடல் மற்றும் மன ரீதியாக தங்களை எவ்வாறு வலிமைபடுத்தி கொள்வது என்பதை மாணவிகள் தெரிந்து கொள்ளவே இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக பயிற்சியாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வேலை நாட்களில் இதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி உடற்கல்வி ஆசிரியர் வகுப்பு அல்லது ஆசிரியர் முன்னிலையில் இந்த பயிற்சி வழங்கப்படும் என்று தகவல் அளித்துள்ளனர்.
0 Comments
Thanks for your comment