வைரலாகும் யூடியூப் டியூசன் முறை மாணவர்கள் குஷியோகுஷி.! பள்ளிகல்வி துறையின் முயற்சிக்கு வரவேற்பு.!
தமிழக பள்ளி கல்வி துறையின் பெரும் சாதனையாக தற்போதுபார்க்கப்படுவது யூடியூப் டியூசன் முறை. இது தற்போதுபட்டி தொட்டி எங்கும் திரைப்படங்கள் போல இதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறியுள்ளது.
இந்த யூடியூப்முறையால் அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அனுபவமிக்க ஆசியர்கள் மற்றும் பாட புத்தகம் தயாரித்தஆசியர்களின் விளக்களுடன் தற்போது, காணொளி மாணவர்களின் சந்தேகங்களுக்கு எளிய முறையில் யூடிப்பில் வலம் வருகின்றது. இதற்கு பெரும் அடித்தளமிட்ட பள்ளி கல்வித்துறையின் முயற்சியை அனைத்து தரப்பு மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.
டிஎன் எஸ்சிஇஆர்டி (TN SCERT):
கற்றல் குறைபாடுகளை களையும் விதமாகவும், கடினமாக உள்ள பாடங்களை மாணவர்கள் மத்தியில் எளிதில் புரிய வைக்கும் விதமாகவும் தமிழக பள்ளி கல்வி துறை கடந்த 4 மாத்திற்கு முன் TN SCERT என்ற யூடியூப் சேனலை துவங்கியது.இதில் பல்வேறு வகுப்பு பாடங்களும் இடம் பெற்றுள்ளன. ஏராளமான பாடப்பிரிவுகளுக்கும் யூடியூப் காணொளியின் விளக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. இதை ஏராளமான மாணவர்களும் ஆவலுடன் தேவைப்படும் நேரத்தில் எடுத்து சந்தேகங்களை தீர்த்து வருகின்றனர்.
தேசிய நுழைவுத் தேர்வுக்கும் தயார்:
நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கும் 50 சதவீதம் வினாக்கள் பெரும்பாலும்11ம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்படுகின்றது. இதற்காக தற்போது பள்ளி கல்வி துறை இந்த TN SCERT என்ற யூடியூப் சேனலை துவங்கியுள்ளது.இந்த நவீன தொழில் நுடப்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிமையாக விளக்கத்துடன் காணொலிகளை தினமும் பதிவிட்டு வருகின்றது.
டியூசன் செலவும் மிச்சம்:
மாணவர்கள் டியூசன் சென்றாலும் அவர்களுக்கு சரியாக புரியாது. திரும்ப திரும்ப மாணவர்களின் சந்தேகங்களுக்கும் டியூசன் ஆசிரியர்களாலும் பதில் அளிக்க முடியாது. தற்போது தமிழக பள்ளி கல்வி துறை உருவாக்கியுள்ள இந்த காணொளி யூடியூப் டியூசன் முறையில் எந்த நேரத்திலும், எங்கே இருந்தாலும் உடனடியாக பாடங்களை பார்த்தும் சந்தேகங்களையும் போக்க கொள்ள முடியும்.க்களை தேவைப்படும் போது, நிறுத்தியும் சந்தேகத்தை போக்கியும் கொள்ளலாம். இது மாணவர்களுக்கு விளையாட்டுபோலவே இருக்கும்.
பெற்றோர்கள் மகிழ்ச்சி:
சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களை பொறுத்த வரை ஒரு பாட பிரிவுக்கு ரூ.10000 வரை ஒரு ஆண்டுக்கு ஆகின்றது எனத் தெரிய வருகின்றது. பள்ளி கல்விதுறையின் இந்த முயற்சி தற்போது பலன் அளித்துள்ளதால், டியூசனுக்கு செலவிடும் பணம் மிச்சமாகும் என்று பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
80,000 சப்ஸ் கிரைப்:
TN SCERT என்ற யூடியூப் சேனலை இதுவரை 80,000 பேர்சப்ஸ் கிரைப் செய்துள்ளனர். மேலும், 1,20, 000 பேர் இதுவரை க்களை பார்த்துள்ளனர். கிராம புறம் முதல் நகரங்கள் வரை அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த பள்ளி கல்வி துறையின் வால் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது வைரல் ஆகியுள்ளது:
தற்போது பள்ளி கல்வி துறையின் இந்த TN SCERT என்ற யூடியூப் சேனல் அனைத்து இடங்களிலும் வைரலாக பார்க்கப்படுகின்றது. மேலும், ஆசியர்களின் டியூசன் பாடங்கள் ஆன்லைனில் தற்போது பரவலாகி வருகின்றது.
0 Comments
Thanks for your comment