தமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம்





தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்த நிலையில் அதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 1 மணிநேரமும், இரவு 1 மணி நேரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 முதல் 5 மணி வரை பட்டாசு வெடித்து கொள்ளலாம் என்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெசோ வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை இந்த ஆண்டு மட்டும் விற்கலாம் என்றும் அடுத்த ஆண்டு விற்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு காலை 4-6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி கோரிய நிலையில் உச்சநீதிமன்றம் தனித்தனியே நேரம் உதுக்கீடு செய்துள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆட்சியர் தொடங்கி வி.ஏ.ஒ. வரை அனைவரும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு விலக்கு
தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post