10, பிளஸ்2 விடைத்தாள் நகல் பெற பக்கத்துக்கு 2 கட்டணம்: சிபிஎஸ்இ அறிவிப்பு!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடக்கிறது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளின்படி மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அல்லது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய மாணவ, மாணவியர் பட்டியல் வெளியிடப்படும். தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட தேதிகளில் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுவார்கள். அதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறையில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் கூடுதலாக இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் விடைத்தாள் நகல் பெறுவதற்காக சிபிஎஸ்இ வைத்துள்ள நடைமுறைகள் தனியாக உள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க விரும்புவோர் பக்கத்துக்கு ₹2, விண்ணப்ப கட்டணம் ₹10 செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, இரண்டு நடைமுறைகளுக்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
0 Comments
Thanks for your comment