புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதிவை புதுப்பிக்கத் தவறியபதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் பதிவு சலுகை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் கடந்த 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்கள் பதிவினை 24.01.2019 தேதிக்குள் அரசு வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாகவோ, அல்லது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவட்டையின் நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், 25.01.2019-க்குப் பிறகு புதுப்பித்தல் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தமிழக அரசு அறிவித்துள்ள இச்சலுகையினைப் பெற்று பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவித்துள்ளார்.
Post Navi

إرسال تعليق

0 تعليقات