வனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
விண்ணப்பித் தவர்களுக்கு நவம்பர் 25ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை ஆன்லைன் எழுத்து தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கஜா புயலால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, ஆன்லைன் தேர்வுக்கான புதிய தேதிகளை, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. இதன்படி 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வரும் டிசம்பர் 6 முதல் 9ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
0 تعليقات
Thanks for your comment