நேரு பிறந்தநாள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 -ஆம் தேதி, பள்ளிக் குழந்தைகளின் புகைப்படத்துடன்கூடிய வாழ்த்துஅட்டைகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 -ஆம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய திட்டம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.
இதன்படி, தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில் அந்தந்த குழந்தைகளின் புகைப்படங்களை இணைத்து அவர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து அட்டைகளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். முதல்கட்டமாக 32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு வாழ்த்து அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது.

0 تعليقات
Thanks for your comment