வனவர் தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்...
வனத்துறையில், வனவர் பணிக்கு நடைபெற உள்ள ஆன்லைன் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்யும் வசதி, நேற்று துவங்கியது.
தமிழகத்தில், 300 வனவர், 726 வனக்காப்பாளர் மற்றும், 152 டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ள வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, அக்டோபர், 6ல் வெளியிடப்பட்டது. இதில், வனவர் பணிக்கான ஆன்லைன் தேர்வு வரும், 25 முதல், 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான, ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களை, www.forests.tn.gov.in மற்றும், https://tnfusrc.in/ என்ற, இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, வனத்துறை அறிவித்துள்ளது.
0 تعليقات
Thanks for your comment