TNPSC - 'குரூப் - 2' தேர்வு விடைக்குறிப்பு கருத்து கூற இன்று கடைசி நாள்
'குரூப் - 2 தேர்வு விடைக்குறிப்பு குறித்து கருத்து தெரிவிக்க, இன்றே கடைசி நாள்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவியில், 1,199 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியே, நவம்பர், 11ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 4.65 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான உத்தேச விடை குறிப்பு, நவ., 14ல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இந்த விடை குறிப்பில் தவறான விடைகள் இருந்தால், ஆதாரத்துடன் கருத்துகளை தெரிவிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.
கருத்துகளை தெரிவிக்க, முதல் முறையாக ஆன்லைன் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, தேர்வர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, இன்று கடைசி நாளாகும்.
0 Comments
Thanks for your comment