மஞ்சப்பை! தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமல்
தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பாலித்தீன் பைகள் உட்பட, 14 பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி, துணியால் ஆன, 'மஞ்சப்பை'க்கு மவுசு அதிகரிக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, இருப்பு வைத்திருப்போர், உள்ளாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்படைக்காதவர்களிடம், பறிமுதல் செய்ய, அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment