வனத்துறை தேர்வு இன்று துவக்கம்

வனத்துறை தேர்வு இன்று துவக்கம்



தமிழகத்தில், 139 மையங்களில், வனவர், வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வு, இன்று துவங்குகிறது.

தமிழகத்தில், 300 வனவர் பணியிடங்களுக்கு, 1.10 லட்சம் பேரும், 878 வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு, 98 ஆயிரத்து, 801 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு, ஆன்லைன் முறையில் நடைபெறும் என, வனத் துறை அறிவித்துள்ளது.

இதில், வனவர் பணியிடங்களுக்கான தேர்வு, 139 மையங்களில், இன்று துவங்குகிறது. வரும், 9ம் தேதி வரை, இத்தேர்வு நடைபெறும். வனக் காப்பாளர் தேர்வு, 122 மையங்களில், வரும், 10, 11 தேதிகளில் நடைபெறும்.இதற்கான விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு வழிமுறை விபரங்கள், தனித் தனியாக அனுப்பப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
8ம் வகுப்பு : தனி தேர்வர்களுக்கு, எட்டாம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர்களாக, எட்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்புவோருக்கு, 2019 ஜன., 21 முதல், 25 வரை தேர்வு நடக்கும். தேர்வுக்கான அட்டவணை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Post Navi

إرسال تعليق

0 تعليقات