Home » , » current affairs daily 4/7/2019

current affairs daily 4/7/2019

Written By REMO RK on Jul 5, 2019 | July 05, 2019

current affairs daily 4/7/2019 

Tnpsc group-4 , Group-2 , Police Exam Current affairs Daily Download
Current Affairs Daily 2019
4/7/2019
Download Kanmani Current Affairs App
www.tnschools.co.in | tnpsc.exams9.in

1. தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்
________________________________________
2. ஈரான் யுரேனிய மிரட்டல்: கவனமாக இருங்கள் -உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
________________________________________
3. எலியில் இருந்து எச்.ஐ.வி. கிருமியை முற்றிலும் அகற்றி அமெரிக்க பல்கலைக்கழகம் நெப்ரஸ்கா பல்கலைக்கழகம் சாதனை புரிந்து உள்ளது.தற்போது, எலிகள் மீதான சோதனையை CRISPR-Cas9 என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜீன்களை மாற்றி அமைப்பது இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும்.
________________________________________
4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய உதவியாளரை பாகிஸ்தான் போலீஸ் கைது செய்ய உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி: ஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் 23 வழக்குகள் பதிவு
________________________________________
5. ரிசர்வ் வங்கியின், துணை கவர்னரான, என்.எஸ்.விஸ்வநாதனுக்கு, மேலும் ஓராண்டுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
________________________________________
6. நாட்டில் இதுவரை மொத்தம், 6.8 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டதாக, லோக் சபாவில் நேற்று (July -1 )அறிவிக்கப்பட்டது.
________________________________________
7. நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018–2019 நிதியாண்டில், மொத்த பிரீமிய வருமானமாக 3.37 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது, 6.08 சதவீத வளர்ச்சியாகும். 
________________________________________
8. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும், பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்களை மீட்கும் வகையில், மத்திய அரசு, 74 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவிக்கான ஏற்பாடுகளுக்காக திட்டமிட்டு வருகிறது.
இத்திட்டத்தில், விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு, 5 சதவீதம் அளவுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்குவது, 4ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் மூலதன செலவினங்களுக்காக நிதி வழங்குதல் என, பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில், அரசுக்கு, மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல்., முதலாவது இடத்தில் உள்ளது. 
________________________________________

9. நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, ஜூன் மாதத்தில், சரிவினை சந்தித்துள்ளது என, ‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
________________________________________
10. உலக கோப்பை பெண்கள் கால்பந்து தொடரின் பைனலுக்கு நெதர்லாந்து அணி முன்னேறியது.பிரான்சில் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது.வரும் ஜூலை 7ல் நடக்கவுள்ள பைனலில் நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் மோதுகின்றன
________________________________________
11. மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை என்றும், அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும், அதற்கு தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
________________________________________
12. மராட்டியத்தில் கனமழையால் துயரம் ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே என்ற அணை  உடைந்தது.
________________________________________
13. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
________________________________________
14. கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
________________________________________
15. சட்டசபையில், 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு 186.24 கோடி நிவாரணம் வழங்கப்படும். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
________________________________________
16. நாடு முழுவதும் ஏழு லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்தார்.
பார்லி. லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர், மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில் 
________________________________________
17. காங்., தலைவர் பதவியை ராகுல் முறைப்படி ராஜினாமா செய்ததை அடுத்து, அடுத்த தலைவர் யார் என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர்.
________________________________________
18. 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி அரசின் 2வது பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் இன்று (ஜூலை 04) தாக்கல் செய்தார். 

0 comments:

Post a Comment

Thanks for your comment

Total Pageviews

Popular Posts