current affairs daily in tamil  07-07-2019



7. பெட்ரோல், டீசல் மீதான மேல் வரி, லிட்டருக்கு, தலா 9 ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், மத்திய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூசன் பாண்டே தெரிவித்திருக்கிறார்.

6. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாயிலிருந்து, 5 கோடி ரூபாய் வரையிலான வருமானம் உடையவர்களுக்கு 39 விழுக்காடும், 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 42 புள்ளி 7 விழுக்காடும், சூப்பர் ரிச் வரி அதிகரிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சக அதிகாரி, சூப்பர் ரிச் வரி மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் குறைவு என விளக்கமளித்திருக்கிறார். அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில், 50 விழுக்காடாக இருப்பதாகவும், சீனா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் தலா 45 சதவிகிதம் என்ற அளவில், சூப்பர் ரிச் வரி இருப்பதாகவும், அவர் கூறியிருக்கிறார்.

5.சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. திரிபாதி

4. வீட்டுவசதி நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்ப பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

3.நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கியிடமிருந்து, 90 ஆயிரம் கோடி ரூபாய், ‘டிவிடெண்டு’ தொகையை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக, மத்திய நிதித் துறை செயலர், சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

2.அமெரிக்காவிடம் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கி தகர்க்கும் அதி நவீன வெடிகுண்டை இந்திய ராணுவம் வாங்குகிறது.எக்ஸ் கேலிபர் ரகத்தை சேர்ந்த அந்த வெடிகுண்டை, தொலைதூரத்தில் இருந்தும் ரிமோட் மூலம் இயக்க முடியும். பயங்கரவாதிகள் அல்லது நாட்டின் எதிரிகள் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் பதுங்கி இருந்தாலும் கூட, அந்த கட்டிடத்தின் மீது இந்த குண்டுகளை வீசினால், அவை , இலக்குகளை மட்டுமே துளைத்து உள்ளே சென்று வெடிக்கும் தன்மை கொண்டவை.

1. ஒருநாள் தரவரிசையில் பேட்டிங்கில் கோஹ்லியும், பவுலிங்கில் பும்ராவும் முதலிடம் பிடித்துள்ளனர். உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசிய ரோகித் சர்மா 2வது இடம் பிடித்தார்.

Download as PDF

Post a Comment

Thanks for your comment

أحدث أقدم